ஊழல் செய்வதிலும், கடன் வாங்குவதிலும்தான் தமிழ்நாடு முதல் மாநிலம்... எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஊழல் செய்வதிலும், போதைப்பொருள் விற்பதிலும், கடன் வாங்குவதிலும்தான் இப்போது தமிழக அரசு முதல் மாநிலமாக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ ஒரே ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்த ஒரே கட்சி அதிமுகதான். பச்சைத்துண்டு பழனிசாமி என்று மு.க. ஸ்டாலின் கிண்டல் செய்கிறார். விவசாயம் பற்றி அவருக்கு என்ன தெரியும்?. அவருக்கு காய்கறிகளின் பெயர்களை முழுமையாக சொல்லிவிடுவாரா?. ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களை பற்றி யோசிக்காமல் தன் குடும்பத்தினர் பதவிக்கு வரவேண்டும் என்று மட்டுமே மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கரூரில் செந்தில் பாலாஜி பினாமிகள் 3 ஆயிரம் பார்களில் கள்ள மது விற்றனர். ஆயுட்காலம் வரையில் சிறையில் இருக்கும் அளவுக்கு ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி. செந்தில்பாலாஜி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கி ஆண்டுக்கு சுமார் 3600 கோடி ரூபாயை கப்பம் கட்டியவர் செந்தில் பாலாஜி. இந்தியாவில் ஊழல் செய்வதிலும் போதை பொருள் விற்பனையிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது.இந்தியாவிலேயே ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக அரசுதான்.

வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விட்டதாக திமுக பச்சை பொய் கூறுகிறது. ஆனால் திமுக வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுத்தார்களா?. மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டதா?. ஆனால் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தினார்கள். அதிமுக கொடுத்த தொடர் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக அரசு வழங்குகிறது. வீட்டில் சுவர் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமைத்தொகையை நிறுத்துவோம் என திமுகவினர் மிரட்டி வருகின்றனர். திமுகவினர் மிரட்டினால் பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது, அதற்கு நான் பொறுப்பு. உரிமைத்தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் கொண்டுவந்த திட்டங்களையெல்லாம் மூடுவதுதான் திமுகவின் சாதனையாக உள்ளது. முதல்வருடனும், அமைச்சர் உதயநிதியுடனும் தொடர்பில் இருந்த ஜாபர் சாதிக் காவல்துறையுடன் தொடர்பை வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வரும், அமைச்சரும் இதுவரை விளக்கமளிக்கவில்லை.

திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. தொழில்கள் எல்லாம் நலிவடைந்துள்ளது. இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள நிர்வாகதிறனற்ற திமுக அரசுதான் காரணம். ஊழல் செய்வதிலும், போதைப்பொருள் விற்பதிலும், கடன் வாங்குவதிலும்தான் இப்போது தமிழக அரசு முதல் மாநிலமாக உள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in