ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு திடீர் நோட்டீஸ்: என்ன காரணம்?

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு திடீர் நோட்டீஸ்: என்ன காரணம்?

அதிமுகவின் கட்சிக்கொடி, பெயர் மற்றும், ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி வருவது குறித்து விளக்கம் கேட்டு ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக 4 அணிகளாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சசிகலா, டிடிவி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டவர்கள் வேண்டுகோள் வைத்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அதை புறந்தள்ளி வருகிறார்.

இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் நேற்று திடீரென கூட்டினார். அப்போது பேசிய ஓபிஎஸ், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து இருக்கிறாரா என்றும் எடப்பாடி தனி கட்சி தொடங்கட்டும் என்றும் அப்போது அவர் எங்கே இருப்பார் என்று தெரியும் என்றும் காட்டமாக பேசியிருந்தார். இதனுடைய ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் தாக்கல் செய்த கட்சியின் வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக ராதாபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதே நேரத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். மேலும் தனது காரில் அதிமுக கட்சிக்கொடியை பேரையும் அவர் பயன்படுத்திய வருகிறார்.

இந்த நிலையில், அதிமுகவின் கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி வருவது குறித்து ஓபிஎஸ்-க்கு விளக்கம் கேட்டு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக இப்படி சிதறி கிடைப்பது எதிர் அணியினருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் என்று அதிமுக அனுதாபிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in