துரத்தும் பொதுக்குழு வழக்குகள்: திருப்பதியில் திடீர் வழிபாடு செய்த ஈபிஎஸ்!

துரத்தும் பொதுக்குழு வழக்குகள்: திருப்பதியில் திடீர் வழிபாடு செய்த ஈபிஎஸ்!

திருப்பதி பெருமாள் கோயிலில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

அதிமுக பொதுக்குழு களேபரங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மன உளைச்சலைக் கொடுத்த நிலையில், நீதிமன்ற தீர்ப்புகள் அவருக்குச் சாதகமாக வந்தன. இதைத் தொடர்ந்து தனது வேண்டுதலை நிறைவேற்ற அவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கார் மூலம் திருப்பதி வந்தடைந்தார். வரும் வழியில் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பட்டாசு வெடித்தும், சால்வை அளித்தும் வழியெங்கும் தொண்டர்கள் உற்சாகப்படுத்தினார்கள். இதையடுத்து நேற்று மாலை திருப்பதியில் உள்ள ஆதிவராக சுவாமி கோயிலில், ஹயக்ரீவர் ஆலயத்தில் தரிசனம் செய்தார்.

இதன் பின்பு திருமலைக்குச் சென்ற அவரை அங்கிருந்த தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய பழனிசாமி, விஐபி தரிசனத்தில் இன்று காலை 6 மணிக்கு சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து பெருமாள் கோயில் எதிரில் அமைந்துள்ள ஆஞ்சநேய சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in