அவர்கள் சொல்வதை அப்படியே கேட்காதீங்க! நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு 'செக்' வைத்த இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இனி எந்த காலத்திலும் பாஜகவுடன்  அதிமுக கூட்டணி வைக்காது என்பதை மக்களிடம் போய் விளக்கமாக சொல்லுங்கள் என்று அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 

அதிமுக 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  அதனை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள  வந்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டின் போது மரணம் அடைந்த 8 குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.   

பின்னர் அதிமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களுக்கான மாவட்டத்தில் பணிகளை மேற்பார்வையிடுங்கள். மாவட்டச் செயலாளர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. மாவட்டச்செயலாளர்கள் ஒத்துழைக்கவில்லையென்றால் உடனடியாக என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம். 

தேர்தல் பணிகளில் மாவட்ட செயலாளர்கள் தலையீடு இருந்தால் நேரடியாக புகாரளிக்கலாம். மாவட்ட செயலாளர்களுக்கு பயந்து அவர்கள் சொல்வதை கேட்டு நடக்காமல் கட்சிக்காக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்.  பொறுப்பாளர்களுடைய பணிகளையும் கட்சி தலைமை நிர்வாகிகள் கண்காணிப்பார்கள்.  

ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி

ஒரு பூத்திற்கு 19 பேர் இருக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு தோராயமாக 2000 பூத்கள் வருகின்றன. 19 பேரில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பூத் கமிட்டி அமைப்பதில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

நிறைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன. பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. நமக்கு யார் தயவும் தேவையில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். நாம் பார்க்காத வெற்றியில்லை. இன்றைய நிலை மாறும், அதிமுக ஆட்சி கட்டிலில் அமரும் ” என்று பேசினார். 

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in