
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து திமுக அரசு மீது புகார் அளிக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் முறைகேடு ஆகியவை தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளிக்கவுள்ளார்.
இதற்காக, சின்னமலை அருகில் இருந்து காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்குச் செல்கின்றனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து திமுக அரசு மீது புகார் மனு அளிக்கவுள்ளனர்.
தமிழ்நாட்டில் நடந்த கள்ளச்சாராய சாவுகள் மற்றும் அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகள் ஆகியவை குறித்து பாஜக ஆளுநரை சந்தித்து நேற்று புகார் அளித்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக இன்று ஆளுநரை சந்தித்து புகார் அளிப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.