சேலத்தில் எடப்பாடியார், திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின்... வீதி, வீதியாக நடந்து சென்று வாக்குசேகரிப்பு!

திருவண்ணாமலையில் நடந்துசென்று வாக்குச் சேகரிக்கும் ஸ்டாலின்
திருவண்ணாமலையில் நடந்துசென்று வாக்குச் சேகரிக்கும் ஸ்டாலின்

திருவண்ணாமலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும்,  சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மக்கள் மத்தியில் நடந்து சென்று வாக்குச் சேகரித்தனர்.

சேலத்தில் காய்கறி வியாபாரியிடம் துண்டுப் பிரசுரம் வழங்கும் எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் காய்கறி வியாபாரியிடம் துண்டுப் பிரசுரம் வழங்கும் எடப்பாடி பழனிசாமி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நாளைக்கு இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.  இரண்டுக்கும் பொதுவாக ஓர் இடத்தில் நடைபெறும் பிரச்சாரக் பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்து வருகிறார். 

அப்படி செல்லும் ஊர்களில் காலையில் எழுந்து நடைபயிற்சிக்கு செல்லும் ஸ்டாலின், காய்கறிச் சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை கொடுத்து தங்கள் கூட்டணி வேட்பாளருக்காக ஆதரவு கேட்டு பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் திருவண்ணாமலையில் இன்று தங்கியிருந்த அவர் அங்குள்ள தேரடி கடைவீதியில் நடந்து சென்று மக்களை சந்தித்து திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்காக  வாக்குகள்  சேகரித்தார். அங்குள்ள மக்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டனர்.

திருவண்ணாமலைக்கு வந்த ஸ்டாலின்
திருவண்ணாமலைக்கு வந்த ஸ்டாலின்

கடந்த இரண்டு தினங்களாக இதேபோன்ற நடைமுறையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடைபிடித்து வருகிறார். நேற்று அவர் திருப்பத்தூரில் கடைவீதி மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் நடந்து சென்று அதிமுக வேட்பாளருக்காக துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார்.  அதேபோல சேலத்தில் பிரசாரம் இன்று மேற்கொள்ளும் அவர் அங்குள்ள அக்ரஹாரம் பகுதியில் நடந்து சென்று அதிமுக வேட்பாளர் விக்னேஷுக்காக  மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இப்படி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடந்து சென்று வாக்கு சேகரிப்பதால் அவர்கள் செல்லும் பகுதியில் உள்ள வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த உத்தி நன்றாக எடுபடுகிறது என்பதால் மற்ற கட்சிகளின் தலைவர்களும் இதே முறையை கையாளும் யோசனையில் உள்ளனராம்.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in