காத்திருக்குது வெயிட்டான கிஃப்ட்... ஐ.டி பிரிவுக்கு அள்ளித் தருகிறார் எடப்பாடியார்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Updated on
2 min read

சமூக வலைதளங்களில் அதிமுகவுக்காக தீவிரமாக களமாடும் தொண்டர்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி  இன்று எடப்பாடி பழனிசாமி  வெயிட்டான  கிஃப்ட்  கொடுக்கப் போவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா காலத்தில், அதிமுக தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு, பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகைகளின்போது ரொக்கத் தொகை வழங்கப்படும். பின்னர் அந்த வழக்கம் நின்று போனது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, சில அமைச்சர்கள், பொங்கல் பண்டிகையின்போது, கட்சியின் கிளை செயலாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி வந்தனர். அதிமுக ஆட்சியில் இருந்து இறங்கிய பிறகு அந்த நடைமுறையும் நின்றுவிட்டது.

இந்நிலையில், ஓபிஎஸ் உடனான மோதலுக்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, கடந்த பொங்கல் பண்டிகையின்போது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், தொகுதி வாரியாக, கழகத்தின் மூத்த தொண்டர்களுக்கு ரொக்கப் பணத்தோடு வேட்டி, சேலை என பொங்கல் பரிசு கொடுத்தார். 

இந்நிலையில், இந்த தீபாவளியையொட்டி, சமூக வலைதளங்களில் தனக்காக தீவிரமாக களமாடும் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் அதிமுகவின் சாதனைகளை பரப்பும் வகையிலும், திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான நபர்களின் லிஸ்ட்டை எடுத்து, அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருமாறு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி தன் கையாலேயே தீபாவளி பரிசை வழங்கி, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறாராம். 

இன்று தீபாவளி பரிசு பெறும் நபர்களில் பலர், அதிமுக ஐடி விங்கில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், அதிமுக ஆதரவாளர்களாக சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களாம்.  அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனத்துக்கு பிறகு தி.மு.க ஐ.டி விங்கிற்கு எதிராக அதிமுக ஐடி விங் கடுமையாக வேலை செய்து வருகிறது. 

திமுக ஐடி விங் 2.0 போலவே, அதிமுக ஐடி விங்கும் அதிரடி காட்டி வருகிறது. அதனால் தான் சமூக வலைதளங்களில் அதிமுகவின் குரலை வலுப்படுத்தும் ஆதரவாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி  தீபாவளி பரிசு தருகிறார்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவுக்காக சமூக வலைதளங்களில் சிறப்பாகச் செயல்படும் சுமார் 200 பேருக்கு ரூ.5000 மதிப்புள்ள கிஃப்ட் கார்டு வவுச்சர், கள செயல்வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் ஸ்டார் பெர்பாமர்ஸ் பேட்ச், ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட உள்ளதாம்.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in