எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் மயக்கம்... முகத்தில் தண்ணீர் அடித்த நிர்வாகிகள்... ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் மயக்கம்... முகத்தில் தண்ணீர் அடித்த நிர்வாகிகள்... ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை கண்டித்து கடந்த 3 நாட்களாக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து திரும்பிய எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, 90 நிமிடத்துக்கு மேல் எடப்பாடி பழனிசாமி பேசினார். நேற்று வரை மந்தமான நிலையில் இருந்த வானிலை இன்று வெயில் வாட்டி வதைத்தது. எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த நிர்வாகியிடம் மைக்கை கொடுத்த எடப்பாடி பழனிசாமி சில நிமிடங்கள் நின்றபடி இருந்தார்.

பின்னர் அருகில் இருந்த நிர்வாகியிடம் மயக்கம் வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். உடனடியாக அங்கேயே அமரவைக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு காரில் வீட்டிற்கு சென்றார் எடப்பாடி பழனிசாமி. ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்ட கீழே அமர்ந்தது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in