`தூக்கத்தில் இருந்து விழித்தெழுங்கள்'- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சாடும் ஈபிஎஸ்

`தூக்கத்தில் இருந்து விழித்தெழுங்கள்'- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சாடும் ஈபிஎஸ்

ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. கடலுக்குள் கடுமையான காற்று வீசுவதால் இந்த மீனவர்களின் குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் மீனவர்கள் கரை திரும்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `கடல் சீற்றம், கனமழை அடுத்த சிலநாள்களுக்கு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்த பின்னும், விடியா அரசு மீனவர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை தகவல் அறிவிக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த 4 மீனவர்களில் இருவர் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடவும் எந்த நடவடிக்கையும் இல்லை. மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தொகுதியிலேயே இந்த நிலை உள்ளது.

இதேபோல் குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள், சுமார் 15 விசைப்படகுகள் இன்னும் கரை திரும்பவில்லை. திமுக அரசும், மீன்வளத்துறையும் இனியேனும் தூக்கத்தில் இருந்து விழித்து மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாகச் செயல்பட்டு அனைவரையும் பத்திரமாக மீட்க வேண்டும். அதேபோல் இந்தப் பருவமழைக்காலம் முடியும் வரை, தமிழகத்தின் கால் பகுதிகளில் முழு வீச்சுடன் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in