தமிழக அரசுக்கு ஈபிஎஸ் திடீர் கோரிக்கை

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வருமானத்திற்கும் அதிகமாக 58.44 கோடி ரூபாய் சேர்த்துள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய 49 இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ' அதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர் கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதும், அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் சோதனைகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்கிறது என்று அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. அவர் சென்னை செல்வதற்காக நேற்று இரவு விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்ததாகவும், ஆனால் திடீரென அதனை ரத்து செய்துவிட்டு மன்னார்குடியில் தங்கி விட்டதாகவும் கூறும் அரசியல் வட்டாரங்கள், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலிருந்து அவருக்கு தகவல் முன்கூட்டியே கசிய விடப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

திமுக அரசு பொறுப்பேற்று சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு சோதனை நடத்துவதில் என்ன பயன் இருக்க முடியும் என்ற கேள்வி ஏற்கனவே எழுந்த நிலையில், சோதனை குறித்து அவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தால் தற்போது நடக்கும் சோதனையால் என்ன பயன் என்று பொதுமக்களால் கேட்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in