ஓபிஎஸ் பற்றிய கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்த ஈபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது ஓ.பன்னீர் செல்வம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார்.

அதிமுகவில் உள்கட்சி குழப்பம் தலைவிரித்தாடுகிறது. அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பதிலடியாக ஓ.பி.எஸ்ம் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்தின் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டேன். என்றவரிடம், அதிமுக வங்கிக்கணக்கை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் அதுபற்றி பதில் சொல்ல முடியாது. வழக்குகள் முடிந்ததும் கருத்து சொல்லப்படும். நீதிமன்றத்தில் மாறி, மாறி வழக்குப்போடுவதால் கட்சி விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதைத் தவிர்க்கவேண்டும் ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in