பழநி முருகன் கோயிலில் காலசந்தி பூஜையில் எடப்பாடி பழனிசாமி!

பழநி முருகன் கோயிலில் காலசந்தி பூஜையில் எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று பழநி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பழநி வந்தடைந்தார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு முதல்முறையாக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது‌.

பழநி கோயிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி
பழநி கோயிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து, இரவு பழநியில் தங்கிய எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ரோப்கார் மூலம் மலைமேல் சென்று, பழநி கோயிலில் நடைபெற்ற காலசந்தி பூஜையில் கலந்துகொண்டு வேடர் அலங்காரத்தில் காட்சி தந்த முருகனை தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். எடப்பாடி பழனிசாமியுடன் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in