`நீங்கள் விசுவாசமாக இருந்தது ஜெயலலிதாவுக்கு அல்ல, வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு'- ஓபிஎஸ்சுக்கு எதிராக ஈபிஎஸ் சாடல்

`நீங்கள் விசுவாசமாக இருந்தது ஜெயலலிதாவுக்கு அல்ல, வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு'- ஓபிஎஸ்சுக்கு எதிராக ஈபிஎஸ் சாடல்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “சில எட்டப்பர்கள் திமுகவோடு உறவு வைத்துக் கொண்டு, கழகத்திற்குக் களங்கம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்று சொன்னவர்கள் அவருக்கு எதிராகவே வேலை செய்தவர்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

சென்னை ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பொதுக்குழுவில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, “இன்றைய சூழலில் கழகம் சிறப்படைய வேண்டும். வலிமை பெற வேண்டும். இன்றைக்குக் கழகத்தைக் காக்கக் கூடிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். சில எட்டப்பர்கள் திமுகவோடு உறவு வைத்துக் கொண்டு, கழகத்திற்குக் களங்கம் கற்பித்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் முறியடிக்க வேண்டும் என்று சொன்னால் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள். அந்த முடிவையும் இன்று பொதுக்குழு உறுப்பினர்கள் நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள். விவசாய பின்னணியைக் கொண்ட என்னை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்திருக்கிறீர்கள்.

இந்தியாவில் எவ்வளவோ கட்சிகள் இருந்தாலும், அங்கு ஜனநாயக முறைப்படி பொறுப்புக்கு வரமுடியாது. அதிமுகவில் எவ்வளவோ பிரச்சினைகள் வந்தன. எந்த தொண்டனாவது விலகி இருக்கின்றானா? இந்த கட்சியிலேயே பதவி பெற்று எட்டப்பனாக இருப்பவர்கள் வேண்டுமானால் கட்சியை விட்டு வெளியேறலாம். ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று 14 மாதம் ஆகிறது. இந்த ஆட்சிக் காலத்தில் மக்கள் ஏராளமான பிரச்சினையை சந்தித்து வருகிறார்கள். எங்கே பார்த்தாலும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. நாட்டை பற்றிக் கவலைப்படாமல், குடும்பத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

இரட்டை தலைமையால் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று இங்கே இருப்பவர்களுக்குத் தெரியும். அதற்காக ஓபிஎஸ்ஸிடம் பலமுறை பேசினார்கள். ஆனால் அவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை. எதற்கெடுத்தாலும் நான் விட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்வார். நாங்கதான் விட்டுக் கொடுத்தோம். அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்று சொல்கிறார். 1989-ல் பொதுச் தேர்தலில் ஜெயலலிதா போடிநாயக்கனூரில் பொதுத் தேர்தலை சந்தித்தார். அப்போது, வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு தலைமை ஏஜென்டாக இருந்தார். ஜெயலலிதா வெற்றிபெறக் கூடாது என்பதற்காகச் செயல்பட்ட நீங்கள் எப்படி அவருக்கு விசுவாசமாக இருக்க முடியும்?” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in