`சினிமாவைப் போன்றது இல்லை அரசியல்'- நடிகர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மெசேஜ்!

`சினிமாவைப் போன்றது இல்லை அரசியல்'- நடிகர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மெசேஜ்!

“நல்ல இயக்குநர்கள் படத்தில் நடிக்கும் போது, நடிகர்கள் எளிதில் செல்வாக்கைப் பெற்று விடுவார்கள். ஆனால் கட்சியில் அப்படி இல்லை. தெருவிலே நின்று பலபேரைப் பார்த்து படிப்படியாகத்தான் உயர முடியும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, தி.நகரில் எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அந்த தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். இதில் ஆர்.கே. செல்வமணி, சந்திரசேகர் உள்ளிட்ட பல இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “34 வயதிலேயே நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பல பேருக்கு அது தெரியாது. அரசியலில் நான் அமைதியாக இருந்த காரணத்தால் பல பேருக்கு என்னுடைய உழைப்பு தெரியாது. என்னுடைய தொகுதியில் எந்த ஊருக்குச் சென்று, எந்த குறுக்குத் தெருவுக்குச் சென்று கேட்டாலும் எடப்பாடி பழனிசாமி என்றால் எல்லோருக்கும் தெரியும்.

உதவி கேட்டவர்களின் பெயரை வெளியில் சொல்லக் கூடாது. இதுவரைக்கும் நான் சொன்னதில்லை; இனியும் சொல்ல மாட்டேன். அரசியலில் ஜொலிப்பது என்பது கடினம். திரைப்படத்தில் நன்றாக வளர்ந்துவிடலாம். நல்ல இயக்குநர்கள் படத்தில் நடிக்கும் போது நடிகர்கள் செல்வாக்கைப் பெற்று விடுவார்கள். ஆனால் கட்சியில் அப்படி இல்லை. தெருவிலே நின்று பலபேரைப் பார்த்து படிப்படியாகத்தான் உயர முடியும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in