சீனியர்களைத் தேடு... கொண்டாடு!

நாஞ்சில் வின்சென்ட் (இடதுபுறம் இருப்பவர்)
நாஞ்சில் வின்சென்ட் (இடதுபுறம் இருப்பவர்)

அதிமுகவை கைப்பற்ற சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் மறைமுக கூட்டணி அமைத்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அதைச் சமாளிப்பதற்கான அனைத்து அஸ்திரங்களையும் கையில் எடுத்துவருகிறார் ஈபிஎஸ். “பொறுப்பில் இருப்பவர்கள், ஆதாயத்துக்காக ஈபிஎஸ் பக்கம் இருந்தாலும் தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள்” என்று போகுமிடமெல்லாம் சொல்லி வருகிறார் ஓபிஎஸ். அந்த வாதத்தை தகர்க்கும் விதமாக, கட்சியைவிட்டு ஒதுங்கி இருக்கும் சீனியர்களை தேடிப்பிடித்து கவுரவிக்கும் வேலையைத் தொடங்கி இருக்கிறார் ஈபிஎஸ்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் வின்சென்ட் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. அப்போதே அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த இவரை, ஜெயலலிதா ராஜ்யசபா எம்பியாக்கினார். அதன் பிறகு அரசியல் ஒத்துவராமல் போனதால் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி கல்வித் தந்தை ஆனார் நாஞ்சில். இந்நிலையில், நாஞ்சில் வின்சென்ட்டின் 25 ஆண்டுகளுக்கு முந்தைய இயக்கப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு எம்ஜிஆர் விருது வழங்குகிறது குமரி மாவட்ட அதிமுக. இன்று மாலை நாகர்கோவிலில் நடைபெறவிருக்கும் அதிமுகவின் 51-ம் ஆண்டு விழாவில் இந்த விருது வழங்கும் வைபவத்தையும் வைத்தது முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரமாம். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒதுங்கி இருக்கும் சீனியர்களைத் தேடிப்பிடித்து மீண்டும் அவர்களை அதிமுக நீரோட்டத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பது ஈபிஎஸ் கொடுத்த ஐடியாவாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in