நிரந்தர பொதுச் செயலாளர், இரட்டை தலைமை பதவிகள் ரத்து... தற்காலிக பொதுச் செயலாளர் ஈபிஎஸ்: அதிமுகவில் அதிரடி தீர்மானங்கள்!

நிரந்தர பொதுச் செயலாளர், இரட்டை தலைமை பதவிகள் ரத்து...  தற்காலிக பொதுச் செயலாளர் ஈபிஎஸ்: அதிமுகவில் அதிரடி தீர்மானங்கள்!

நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவியும், இரட்டைத் தலைமை முறையும் ரத்து செய்யப்படுவதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக பொதுக்குழுவிற்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னை ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வருகிறது. தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழுவில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக எழுச்சி பெற ஒற்றைத் தலைமை முறை தேவைப்படுகிறது. இரட்டைத் தலைமையால் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக முடிவு எடுப்பதில் சங்கடம், தாமதம் ஏற்படுகிறது. இதனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரட்டைத் தலைமை முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி துணை பொதுச் செயலாளராக மாற்றப்பட்டு அந்த பதவிக்குத் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவிக்கு நான்கு மாதத்தில் தேர்தல் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in