ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 106 பேரை களமிறக்கினார் ஈபிஎஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 106 பேரை களமிறக்கினார் ஈபிஎஸ்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு  தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள  தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் ஈ.பி.எஸ்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறங்கி உள்ளார்.  அவருக்கு ஆதரவாக கே.என்.நேரு தலைமை தேர்தல் பணிக்குழு  அமைக்கப்பட்டு அந்த குழு தேர்தல்  களத்தில் படு விறுவிறுப்பாக தேர்தல் பணிகள் ஆற்றி வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலை உள்ளது. ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்படவும்,  அமமுக தரப்பில் களம் இறங்கவும் தயாராக இருக்கிறார்கள்.  இப்படி ஒரு குழப்பமான நிலையில் தங்கள் வேட்பாளருக்கு பணியாற்ற தேர்தல் பணிக் குழுவை அமைத்துள்ளார் ஈபிஎஸ்.

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில்   அமைக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் பணிக்குழுவில்  அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பொன்னையன், எம்பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செம்மலை, தளவாய் சுந்தரம், வளர்மதி, செல்லூர் ராஜூ, தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா உள்பட 106 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, கட்சி நிர்வாகிகளும், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, கழக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று ஈபிஎஸ்கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in