துரத்தும் வழக்குகள், நெறிக்கும் வருமான வரித்துறை சோதனைகள்: ஈபிஎஸ் எடுக்கும் டெல்லி அஸ்திரம்!

துரத்தும் வழக்குகள், நெறிக்கும் வருமான வரித்துறை சோதனைகள்: ஈபிஎஸ் எடுக்கும் டெல்லி அஸ்திரம்!

எடப்பாடி பழனிசாமி இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்த நிலையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓபிஎஸ், ஈபிஸ் தரப்பினரிடையே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், டெல்லி ஆதரவு தங்களுக்கு வேண்டும் என இருதரப்பினரும் காய் நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் அதிமுக அலுவலகம் கட்டப்பட்டு அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மே மாதமே கட்சி அலுவலகத்தைத் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.

உட்கட்சி மோதல் வலுத்த நிலையில் தற்காலிகமாக அதை நிறுத்தி வைத்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி வசம் கட்சி வந்த நிலையில், டெல்லி அலுவலகத்தைத் திறக்க மோடி மற்றும் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். இன்று அமித் ஷாவை சந்திக்கும் ஈபிஎஸ், கட்சி நிலவரம் குறித்தும், வருமான வரித்துறை வழக்குகள் குறித்தும் பேச இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in