`என்னய்யா கத்துறீங்க, கம்முன்னு இருங்க!'- ஆவேசமாக பாய்ந்த எடப்பாடி பழனிசாமி

`என்னய்யா கத்துறீங்க, கம்முன்னு இருங்க!'- ஆவேசமாக பாய்ந்த எடப்பாடி பழனிசாமி

செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, காவல்துறையினர் தடுக்க முயன்றனர். இதனால் அவர் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணை தலைவாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை மாற்றிவிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்தது. பதிலுக்கு ஓபிஎஸ் தரப்பும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தது. இதனிடையே, சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சபாநாயகரின் செயலை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தடையை மீறி நடைபெற்றது. இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சிறைவைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ், "சட்டமன்றத்திலே சட்டப்பேரவை தலைவரால் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. சபாநாயகரிடம் அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து விட்டோம்" என்று பேசிக் கொண்டிருந்தபோது எடப்பாடி பழனிசாமி திடீரென எழுந்து, ஏங்க இருங்க. கத்தாதிங்க. கம்முன்னு இருங்க. நிருபர் எல்லாம் நின்னுகிட்டு இருக்காங்க" என்று காவல்துறையினரை பார்த்து ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய ஈபிஎஸ், "சட்டமன்ற பேரவை தலைவரிடம் அனைத்து ஆதாரங்களையும் முழுமையாக கொடுத்து இருக்கிறோம். அதிமுக துணை தலைவர் ஆதாரங்களை கொடுத்திருக்கிறார். ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டதற்கும் ஆதாரம் கொடுத்திருக்கிறோம். 11.7.2002 அன்று பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துவிட்டது. எங்களுக்கு அவர்கள் நீக்கப்பட்டு செல்லும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தார்கள். அதற்கும் தடையாணை கொடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது இந்த தீர்மானம் செல்லும் என்று கூறியிருக்கும்போது அவர்கள் நீக்கப்பட்டதும் சொல்லும்" என்றும் ஆவேசமாக பேசினார்.

இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எதிர்க்கட்சிகளை ஒடுக்குகின்ற நிலையில் தான் இன்றைய முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை முடக்க வேண்டும், சிதைக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஸ்டாலின். உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in