சோனியா காந்தி இல்லம், காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே குவிக்கப்பட்டுள்ள போலீஸார்: டெல்லியில் பதற்றம்!

சோனியா காந்தி
சோனியா காந்தி

பணமோசடி வழக்கில் டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு நாளிதழின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை இன்று சீல் வைத்துள்ளது. மேலும் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லம், ராகுல் காந்தியின் இல்லம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் மற்றும் 11 இடங்களில் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணமோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடமும் அமலாக்கத்துறை பலமுறை விசாரணை நடத்தியுள்ளது.

தற்போது காங்கிரஸ் அலுவலகம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு அருகிலேயே சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் இல்லங்களும் உள்ளன. எனவே இவர்களின் வீட்டில் ஒருவேளை அமலாக்கத்துறை சோதனை நடத்துமோ என்ற பதற்றமும் தற்போது ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் இப்போது இந்த பகுதிக்கு வரதொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in