தமிழகமே பரபரப்பு... சபரீசனின் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

தமிழகம் முழுவதும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகம், தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், மணல்குவாரி அதிபர்கள், தொழிலதிபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அதைபோன்று, சென்னையிலும் பல்வேறு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிட்டர் சண்முகராஜன்
ஆடிட்டர் சண்முகராஜன்

சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் இன்று காலை முதல் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் சண்முகராஜ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சண்முகராஜ், சபரீசன் சம்பந்தமான கணக்குகளை கவனித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

மேலும் முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேனாம்பேட்டையில் உள்ள குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதலே சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in