சுகர் வரவேண்டும் என்பதற்காக இனிப்பு அதிகம் சாப்பிடுகிறார்... கேஜ்ரிவால் மீது நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

அமலாக்கத்துறையினர் பிடியில் அர்விந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத்துறையினர் பிடியில் அர்விந்த் கேஜ்ரிவால்

சுகர் அதிகமாகி அதைவைத்து ஜாமீன் பெறுவதற்காக சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவால் அதிகளவு இனிப்புகளை சாப்பிட்டு வருவதாக, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21-ம் அமலாக்கத்துறையால், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

இதனிடையே, கேஜ்ரிவால் மீண்டும் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சர்க்கரை நோயால் அவதிப்படும் கேஜ்ரிவாலுக்கு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், அவரது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேஜ்ரிவால், மாம்பழம், சர்க்கரை கலந்த டீ, இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். அப்படி சர்க்கரை அளவை தாமாகவே அதிகரித்து அதன் மூலம் ஜாமீன் பெற முயற்சிக்கிறார்” என புகார் தெரிவித்தார்.

கேஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின் வாதிடும் போது, அமலாக்கத்துறை, ஊடகங்களில் இது போன்ற தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக கண்டனம் தெரிவித்தார். மேலும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in