சென்னையில் 16 ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள்... தேர்தல் ஆணையத்தின் சூப்பர் நடவடிக்கை!

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிங்க் வாக்குச்சாவடிகள்
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிங்க் வாக்குச்சாவடிகள்

சென்னையில் கர்ப்பிணி பெண்கள், வயதான பெண்கள் வாக்களிக்க வசதியாக பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் 16 பிங்க் பூத் வாக்கு சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நேற்றுடன் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இன்று தேர்தல் ஆணையம் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபாட் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வனத்துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளனர். செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியாது என்பதால், அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வயர்லெஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இதனிடையே நகரப் பகுதிகளில் வாக்குப்பதிவை அதிகரிப்பதற்காக தேர்தல் ஆணையம் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி சென்னையில் மட்டும் சுமார் 16 இடங்களில் பிங்க் பூத்கள் என்று அழைக்கப்படும் மகளிர் மட்டுமே நிர்வகிக்கும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், வயதான பெண்கள் வாக்களிக்க வசதியாக இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அலுவலர்கள் ஊழியர்கள், போலீஸார் உட்பட அனைவரும் பெண்களாகவே இருப்பர். அனைவரும் பிங்க் வண்ண உடைகளை அணிந்து பணியாற்ற உள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, தென்சென்னை தொகுதியில் 56.92 சதவீத வாக்குகளும், வடசென்னை தொகுதியில் 64.04 சதவீதம் வாக்குகளும், மத்திய சென்னை தொகுதியில் 58.75 சதவீத வாக்குகளும் மட்டும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in