பிரதமர் மோடி, ராகுல் காந்தி மீதான விதிமீறல் புகார்களை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம்: 29ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு!

பிரதமர் மோடி, ராகுல் காந்தி
பிரதமர் மோடி, ராகுல் காந்தி

பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் மீதான தேர்தல் விதி மீறல் புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேர்தல் ஆணையம், இருவரும் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீதான தேர்தல் நடத்தை விதி மீறல்களை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மதம், சாதி, சமூகம் அல்லது மொழி அடிப்படையில் வெறுப்பு மற்றும் பிளவை ஏற்படுத்துவதாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை எழுப்பின. இந்த புகாரின் பேரில் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாராவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் மோடி, மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களின் பேரில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல், பாஜக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், தமிழ்நாட்டின் கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி மீது தவறான மற்றும் முற்றிலும் மோசமான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறியதாகவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிரான பாகுபாடு காரணமாக ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு தான் அழைக்கப்படவில்லை என மல்லிகார்ஜுன கார்கே கூறியது நடத்தை விதிமீறல் எனவும் இவர்கள் மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

அதன் அடிப்படையில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கும் தேர்தல் ஆணையம், வரும் 29ம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமருக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்வது இதுவே முதல் முறை என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in