ஹேமமாலினி சர்ச்சை... பிரச்சாரத்தில் ஈடுபட காங்கிரஸ் எம்.பி-க்கு 2 நாள் தடை விதித்தது தேர்தல் ஆணையம்

சுர்ஜேவாலா - ஹேமமாலினி
சுர்ஜேவாலா - ஹேமமாலினி

சீனியர் நடிகையும் பாஜக எம்பி-யுமான ஹேமமாலினியை கொச்சையாக பேசி அவதூறு செய்ததாக, காங்கிரஸ் கட்சியின் எம்பி-யான ரந்தீப் சுர்ஜேவாலா என்பவருக்கு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட 48 மணி நேரம் தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரா தொகுதியின் 2 முறை எம்பி-யான ஹேமமாலினி மீண்டும் அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது அதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பலவகையிலும் விமர்சனம் செய்தனர். இந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி-யான ரந்தீப் சுர்ஜேவாலா என்பவர் செய்த விமர்சனம் பொதுவெளியில் சர்ச்சைக்கு ஆளானது.

ஹேமமாலினி
ஹேமமாலினி

அவரது விமர்சனம் ’பாலியல் அடிப்படையிலும், மோசமான மற்றும் நெறிமுறையற்ற வார்த்தைகளை கொண்டிருந்ததாகவும்’ அதன் பின்னர் தேர்தல் ஆணையம் கண்டிக்கும் அளவுக்கு குற்றச்சாட்டுக்கு ஆளானது. சுர்ஜேவாலா விமர்சனம் தொடர்பாக அவருக்கு எதிரான புகாரைப் பெற்ற தேர்தல் ஆணையம், மாதிரி நடத்தை விதிகளை மீறியதாக, ஷோ-காஸ் நோட்டீஸ் ஒன்றை அவருக்கு அனுப்பியது. அதில் சுர்ஜேவாலாவின் கருத்துக்கள் அவதூறு வகையில் சேரும் என்று கூறியதோடு, அதற்கு வன்மையான கண்டனங்களையும் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

அந்த நோட்டீசுக்கு சுர்ஜேவாலா முறைப்படி பதில் அளித்திருந்தார். ஆனால் அதில் ஆணையம் திருப்தியடையவில்லை. இது தொடர்பாக சுர்ஜேவாலா பாஜகவை தாக்கினார். ’பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு உண்மைகளை திரித்து பொய்களை பரப்புகிறது’ என்று குற்றம் சாட்டினார். தான் பேசியது தொடர்பான முழுநீள வீடியோவை பகிர்ந்து நியாயம் கேட்கவும் செய்தார்.

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

ஆன்போதும், சுர்ஜேவாலா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், ‘அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பெண்களின் கெளரவம் மற்றும் கண்ணியத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் மற்றும் சொற்களில் இருந்து விலகி இருக்குமாறு’ ஆணையம் அறிவுறுத்தியது. ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ், பொதுக் கூட்டங்கள், பேரணிகள், ஊடக நேர்காணல்கள் உள்ளிட்ட தேர்தல் பிரச்சாரம் சார்ந்தவற்றில், ஏப்ரல் 16 மாலை 6 மணி முதல் 48 மணிநேரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக” சுர்ஜேவாலாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இதற்கு முந்தைய தேர்தல்களிலும், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தின் தடைக்கு ஆளாகி உள்ளனர். நடப்பு மக்களவைத் தேர்தல் களத்தில் முதல் நபராக, தேர்தல் ஆணையத்தின் தடைக்கு காங்கிரஸ் எம்பி சுர்ஜேவாலா ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in