கோவை சம்பவம் தொடர்பாக மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை கடிதம்... ஆனால்? - அண்ணாமலை தகவல்

கோவை சம்பவம் தொடர்பாக மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை கடிதம்... ஆனால்? -  அண்ணாமலை தகவல்

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னரே மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிற்கு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கோவை கார் வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து கோவை மாவட்ட பாஜகவினரே முடிவெடுக்க வேண்டும். ஆனால், நான் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், அதற்குத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறுகிறார்கள். கோவையில் தற்போது இயல்பு நிலை திரும்புவதாகவும், அதனால் முழு அடைப்பு வேண்டாம் என சில சங்கங்கள் எனக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு முன்கூட்டியே கடிதம் எழுதி இருக்கிறது. 18-ம் தேதி தமிழக அரசிற்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த கடிதத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உயர் அதிகாரிகள் காலம் தாழ்த்தியுள்ளனர்.” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in