ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா
ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள்: ஹரியாணா ஆளுநருக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஜனநாயக் ஜனதா கட்சியின் (ஜேஜேபி) துஷ்யந்த் சவுதாலா அம்மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பெரும்பான்மை இழந்த பாஜக:

ஹரியாணா மாநிலத்தில் 3 சுயேச்சை எம்எல்ஏ-க்கள், ஆளும் பாஜகவின் நயாப் சிங் சைனி அரசுக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் ஹரியாணாவில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும், மாநில ஆளுநர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பாஜகவின் முன்னாள் கூட்டாளியான ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி), கடந்த மார்ச் மாதம், தனது ஆதரவை வாபஸ் பெற்றதால், ஹரியாணாவில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது.

 ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி
ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி

காங்கிரஸுக்கு ஆதரவு:

அப்போது முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் மாற்றப்பட்டு, புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவி ஏற்றார்.

இச்சூழலில் புந்த்ரி தொகுதி எம்எல்ஏ ரந்தீர் கோலன், நிலோகேரி தொகுதி எம்எல்ஏ தர்மபால் கோண்டர், சார்க்கி தாத்ரி தொகுதி எம்எல்ஏ சோம்பிர் சிங் சங்வான் ஆகிய மூன்று சுயேச்சை எம்எல்ஏ-க்கள் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கடந்த 7ம் தேதி அறிவித்தனர்.

மேலும், தாங்கள் அனைவரும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இது தவிர அம்மாநிலத்தில் ஒரு பாஜக மற்றும் சுயேச்சை எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பாஜக அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. எனவே, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ், ஜேஜேபி, சுயேச்சை எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 துஷ்யந்த் சவுதாலா
துஷ்யந்த் சவுதாலா

நம்பிக்கை வாக்கெடுப்பு:

இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜேஜேபி கட்சியின் துஷ்யந்த் சவுதாலா ஹரியாணா ஆளுநருக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நடவடிக்கையை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு பலம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கு பெரும்பான்மை இல்லையென்றால், உடனடியாக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.” என்றார்.

இதற்கிடையே முதல்வர் நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் கூறுகையில், "பல எம்எல்ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். எனவே, ஆட்சி கவிழும் அபாயத்துக்கு இடமில்லை" என்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in