`அண்ணன் எடப்பாடி ஆட்சியில் 3 இடங்களில் தான் தண்ணீர் தேங்கியது'- சொல்கிறார் ஜெயக்குமார்

`அண்ணன் எடப்பாடி ஆட்சியில் 3 இடங்களில் தான் தண்ணீர் தேங்கியது'- சொல்கிறார் ஜெயக்குமார்

"அண்ணன் எடப்பாடி ஆட்சி காலத்தில் சென்னையில் மூன்று இடங்களில் மட்டும் தான் தண்ணீர் தேங்கியது" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட புளியந்தோப்பு, ஆடுதொட்டி பகுதி மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்று உணவு வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ``சென்னையில் பெய்த இரண்டு நாள் மழைக்கே இந்த அரசு திணறிக் கொண்டிருக்கிறது. இந்த மாதம் மற்றும் டிசம்பர் வரைக்கும் மழை இருக்கிறது. இந்த இரண்டு நாள் மழைக்கு எப்படி குழம்பி தவிக்கிறீர்கள். ஆனால் இன்னும் மழை இருக்கிறதே. எப்படி சமாளிப்பீர்கள். 2000 கிலோமீட்டர் தூரத்துக்கு தூர்வாரி விட்டேன் என்று முதல்வர் சொல்கிறார்.

ஆனால் இப்போது அமைச்சர் சேகர்பாபு 1200 கிலோ தூரத்துக்கு நாங்கள் தூர்வாரி விட்டோம் என்கிறார். அப்படி பார்த்தால் 2000 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரினால் ஏன் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்படி என்றால் மாற்றி கணக்கு எழுதி விட்டார்களா? அதனால் தான் யோசிக்க வேண்டி இருக்கிறது. முதல்வர் தொகுதியான கொளத்தூரில் பெரிய மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். இதற்கு முன் முதல்வர் என்ன சொன்னார். கொளத்தூரில் இனி தண்ணீர் தேங்காது என்று சொன்னார். தற்போது பம்பு போட்டு நீரை எடுக்கிறீர்கள். அப்படியென்றால் வாய்க்காலில் தண்ணீர் போகவில்லையா?

அண்ணன் எடப்பாடி ஆட்சி காலத்தில் சென்னையில் மூன்று இடங்களில் மட்டும் தான் தண்ணீர் தேங்கியது. எங்கள் ஆட்சியில் 1500 கிலோ மீட்டரில் தூரத்தில் கால்வாய் பணியை முடித்து விட்டோம். வெறும் 2000 கிலோ மீட்டர் தூரம்தான் இருந்தது. இந்த திட்டம் யாரால் கொண்டுவரப்பட்டது என்பதை சொல்ல முடியுமா? நாங்கள் போட்ட திட்டத்தைதான் நீங்கள் இன்று அமல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் போட்ட கால்வாயில் தான் இன்று இரண்டு நாளில் தண்ணீர் வடிந்தது. எந்த கால்வாயும் தூர்வாரப்படவில்லை.

ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு கிடைக்கிறது. 24 மணி நேரமும் அம்மா உணவகம் திறக்கப்பட்டு சாப்பாடு இலவசமாக மக்களுக்கு கொடுத்தோம். திருவிக நகரில் 11 சென்டிமீட்டர் மழை பெய்து இருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் அந்த மக்களுக்கு நீங்கள் சாப்பாடு கொடுத்தீர்களா? ஏதாவது பிரியாணி போட்டீர்களா? சென்னை மாநகராட்சி மூலம் ஏதாவது உணவு பொட்டலம் வழங்கினீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in