4 கிராம் தங்கத்தாலி, ரூ.1 லட்சம் சீர்வரிசை: கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த துர்கா ஸ்டாலின்!

திருமணம் செய்துவைத்த துர்கா ஸ்டாலின்
திருமணம் செய்துவைத்த துர்கா ஸ்டாலின்

தனது கணவர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி துர்கா ஸ்டாலின், 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார்.

70 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த துர்கா ஸ்டாலின்
70 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த துர்கா ஸ்டாலின்

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் கடந்த மார்ச் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளையொட்டி திமுகவினர் அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு உதவிகளை வழங்கினர். இந்த நிலையில் கணவரின் பிறந்தநாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் 70 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடத்தி வைத்தார் மனைவி துர்கா ஸ்டாலின்.

70 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த துர்கா ஸ்டாலின்
70 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த துர்கா ஸ்டாலின்

மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு துர்கா ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க, 70 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஒவ்வொரு ஜோடிக்கும் 4 கிராம் தங்க தாலி உள்பட பெட், பீரோ உள்பட ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசை வழங்கினார் துர்கா ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அவர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in