முதல்வரின் சர்ச்சைப் பேச்சு பற்றிய கேள்வி: நாசுக்காகப் பதிலளித்த துரைமுருகன்!

முதல்வரின் சர்ச்சைப் பேச்சு பற்றிய கேள்வி: நாசுக்காகப் பதிலளித்த துரைமுருகன்!

திமுக பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மீதான தன் மன வருத்தங்களைக் கொட்டித் தீர்த்தார். இந்நிலையில் அது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

திருச்சி, முக்கொம்பு-கொள்ளிடம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் துரைமுருகன், “தற்போது வளர்ந்துள்ள விஞ்ஞானத்தில் இறந்தவர்களையே பிழைக்க வைத்து விடுகிறார்கள். வெள்ள நீரையா சேமிக்க முடியாது?. வெள்ளநீரைச் சேமிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளும். கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரைக் கூட சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்  பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.

‘சில அமைச்சர்கள் தன்னை தூங்கவிடாமல் செய்கிறார்கள் என முதல்வர் சொல்லியிருக்கிறாரே’ என்ற கேள்விக்குப் பதில் அளித்த துரைமுருகன், ‘அது குறித்து அவரே சொல்லிவிட்டாரே, மேற்கொண்டு நான் என்ன சொல்வது?’ என்றார். இதுபோல் கடம்பூர் ராஜு பற்றிய கேள்வி ஒன்றிற்கு, ‘அவர் யார் என்றே எனக்குத் தெரியாது!’ என நழுவிவிட்டார். நிருபர்களின் கேள்விகளுக்கு துரைமுருகன் சாதுரியமாகவே பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in