
தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று துரை வைகோ, டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுக, மத்தியில் ஆளும் பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில் . தமிழரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்தால் மதிமுக ஆதரவளிக்கும் என்று திருப்பத்தூரில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ இன்று பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் துரை வைகோ மட்டுமின்றி அனைவரும் ஆதரிப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
பாஜக தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காது என்று கூறப்படுவதால், இவர்கள் இருவரும் இப்படி பேசி வருவதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்ணைப்பாளர் சீமானும் நேற்று இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.