ராகுல் காந்தியுடன் பாத யாத்திரை மேற்கொண்ட துரை வைகோ, நடிகை பூஜா பட்!

ராகுல் காந்தியுடன் பாத யாத்திரை மேற்கொண்ட துரை வைகோ, நடிகை பூஜா பட்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ, பாலிவுட் நடிகை பூஜா பட் ஆகியோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு "பாரத் ஜோடோ" என்ற யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ம் தேதி தனது பாத யாத்திரையை தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தேசியக்கொடியை கொடுத்து பாத யாத்திரையை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 5 நாட்கள் பாத யாத்திரையை முடித்துக் கொண்டு கேரளா சென்ற ராகுல் காந்தி, அங்கு சில நாட்கள் பாத யாத்திரை மேற்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் தமிழகத்தின் நீலகிரி பகுதியில் ராகுல் காந்தி பாத யாத்திரை தொடர்ந்தார். இதன்பின் கர்நாடக மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பிறகு தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

56-வது நாளான இன்று ஹைதராபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மாநில முதல்வர் சந்திரசேகர் ராவை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த பாத யாத்திரையின் போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ பங்கேற்றார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராகுல் காந்தியுடன் 2 மணி நேரம் துரை வைகோ பாத யாத்திரையில் கலந்து கொண்டார். மேலும் பாலிவுட் நடிகை பூஜா பட்டும் ராகுல் காந்தி பாத யாத்திரையில் பங்கேற்றார். 150 நாட்கள் 12 மாநிலங்களை கடந்து காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார் ராகுல் காந்தி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in