‘காங்கிரஸ் ஆட்சியின் மின்தடையே, மக்கள்தொகை அதிகரிப்புக்கு காரணம்’ -மத்திய அமைச்சர் கண்டுபிடிப்பு

மின்சாரம் பகிர்மானம்
மின்சாரம் பகிர்மானம்

‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முறையாக மின்சாரம் வழங்கப்படாததே மக்கள்தொகை உயர்வுக்கு காரணம்’ என்றொரு கண்டுபிடிப்பை பகிர்ந்திருக்கிறார் மத்திய அமைச்சரான பிரலாத் ஜோஷி.

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடி பிடித்துள்ளது. மே மாதம் தேர்தல் எதிர்பார்க்கப்படும் சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களமாடி வருகின்றன. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையிலான போட்டி உச்சம் பெற்றுள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆகமுடிந்த வழிகளை பாஜக பரிசீலித்து வருகிறது. அதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அள்ளி விடுகிறது.

அப்படியான வாக்குறுதிகளில் ஒன்று இலவச மின்சாரம் தொடர்பானது. மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. அதனால் துணுக்குற்ற பாஜக பலவகையிலும் காங்கிரசை தாக்கி வருகிறது. அதற்கான கூட்டம் ஒன்றில் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி பங்கேற்று பேசினார்.

அப்போது, “காங்கிரஸ் இலவசமாக மின்சாரம் தருவதாக சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தபோது, காங்கிரஸ் எப்போது முறையாக மின்சாரம் தந்திருக்கிறது? மோடியின் பாஜக ஆட்சி மலர்ந்த பிறகே ஒழுங்காக மின்சாரம் கிடைத்து வருகிறது. குக்கிராமங்களில் கூட மின்சாரம் கிடைக்க மோடி வழி செய்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் முறையான மின்சாரம் கிடைக்காததே, மக்கள்தொகை இந்தளவுக்கு உயர்ந்திருப்பதற்கு காரணம்” என்று பிரலாத் ஜோஷி பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in