3 வாரங்களாக குடிநீர் வராத குழாய்க்கு பூ போட்டு 'காரியம்' செய்த மக்கள்: அமைச்சர் தொகுதியில் அவலம்

குடிநீர் குழாய்க்கு பூ போட்ட பெண்கள்
குடிநீர் குழாய்க்கு பூ போட்ட பெண்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

காலிக் குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள்
காலிக் குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அப்பகுதிப் பெண்கள், குடிநீர் குழாய்க்கு பூ போட்டு காரியம் செய்வது போல காலிக் குடங்களுடன் காத்திருந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "இப்பகுதியில் தண்ணீர் வராமல் தினமும் நாங்கள் ரூ. 15 முதல் 25 கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது எங்களுக்கு கட்டுபடியாகவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in