`திராவிடம் என்பது தென் மாநிலங்களை உள்ளடக்கியது'- சொல்கிறார் ஆளுநர் ரவி

`திராவிடம் என்பது தென் மாநிலங்களை உள்ளடக்கியது'- சொல்கிறார் ஆளுநர் ரவி

"திராவிடம் என்பது தென் மாநிலங்களை உள்ளடக்கியது" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கை ஆளுநர் ரவி இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய ஆளுநர், இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பாரதம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது பல்வேறு கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்டது. தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது.

அரசியல் கட்சிகள் நம்முடைய பார்வையை குறுக்கி உள்ளன. கட்சிகள் அதிகாரத்துக்காக மொழி, சாதி மற்றும் சாதிய உட்பிரிவுகளை வைத்து அரசியல் செய்வார்கள். ஆனால் இந்தியா என்பது அடிப்படையில் அனைவரும் இடையே உள்ள கலாச்சார ஒற்றுமை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in