குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு: யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகள் எவ்வளவு?

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது சுற்று முடிவுகள் வெளியான நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு 5,77,777 வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் 2,61,062 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதனால் முர்முவின் வெற்றி உறுதியாகிவிட்டது.

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மூன்று சுற்று முடிவுகள் வெளியான நிலையில் இன்னொரு சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது சுற்றின் முடிவிலேயே பாஜக வேட்பாளர் பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளார். இதுவரை திரௌபதி முர்முவை 53.18% வாக்குகளை கைப்பற்றியதால் அவரின் வெற்றி உறுதியாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு இதுவரை 24.03% வாக்குகள் கிடைத்துள்ளன.

இதுவரை 20 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. மூன்றாவது சுற்றின் முடிவில் திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹாவைவிட 3,16,715 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 3வது சுற்று வரை முர்முவுக்கு 2161 உறுப்பினர்களும், சின்ஹாவுக்கு 1058 பேரும் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் 17 எம்.பிக்கள் மற்றும் 14 எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி திரௌபது முர்முவுக்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in