பத்திரப்பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக தமிழக அரசு அதிரடியாக குறைத்துள்ளது.
023-24-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு துறைகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் பல அதிரடி சலுகைகளும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார் நிதியமைச்சர். நிலம் வாங்குபவர்களின் சுமையை குறைக்க பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.
மேலும் நடப்பு நிதி ஆண்டில் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இனி வழிகாட்டி மதிப்பில்லை 5 சதவீத முத்திரைத்தீர்வை, சொத்து மாற்று 2 சதவீதம், பதிவுக் கட்டணம் 2 சதவீதம் செலுத்த வேண்டும். ஏழை, நடுத்தர மக்களுக்கு குறிப்பாக வங்கி கடன் மூலம் வீடு வாங்குவோருக்கு பெரிதும் பயன் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.