டாக்டர் சரவணனின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது: அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் பேட்டி

டாக்டர் சரவணனின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது: அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் விரும்பத்தகாத வகையில் பாஜக தொண்டர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது. டாக்டர் சரவணன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளோடு நடைபெற்ற சண்டையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன்( 24) வீரமரணம் அடைந்தார். இவரது உடல் இரு நாட்களுக்குப் பிறகு நேற்று மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தது.

லட்சுமணன் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு காரில் புறப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பாஜகவினர் அவரது கார் மீது காலணியை வீசித் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 6 பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, பாஜக நகர் மாவட்ட தலைவர் சரவணன் நள்ளிரவில் சந்தித்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். அத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் இன்று கூறுகையில்," யாருமே விரும்பாத கசப்பான சம்பவம் மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. விரும்பத்தகாத வகையில் பாஜக தொண்டர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது. டாக்டர் சரவணன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in