அமிர்தசரஸ் பாஜக தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டர் ராஜ்குமார் வெர்கா அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மேற்கு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ராஜ்குமார் வெர்கா. இவர் கடந்த 2022 ஜூன் 4-ம் தேதி பல்பீர் சிங் சித்து, குர்பிரீத் சிங் கங்கர் மற்றும் சுந்தர் ஷாம் அரோரா ஆகியோருடன் சண்டிகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜகவில் சேர்ந்தார். இதனால் காங்கிரஸார் அதிர்ச்சியடைந்தனர். பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்த வெர்கா, கட்சி தாவியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாஜகவில் இருந்து அவர் விலகுவதாக இன்று அறிவித்து மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களைச் சந்திக்க இன்று செல்வதற்கு முன்பு அமிர்தசரஸில் வெர்கா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," காங்கிரஸில் இருந்து விலகியதன் மூலம் தவறு செய்து விட்டேன். காங்கிரஸை விட்டு வெளியேறியதற்காக நான் வருந்துகிறேன். இந்த தவறை சரி செய்ய புதுடெல்லி செல்கிறேன். காங்கிரஸ் மேலிடத்துடன் தொடர்பில் இருந்தேன். இன்று மூத்த தலைவர்கள் முன்னிலையில் மீண்டும் கட்சியில் சேரப் போகிறேன். காங்கிரஸில் இருந்து விலகிய மேலும் பல தலைவர்களும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வருவார்கள்" என்று கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!
திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!
கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!
அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!
நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!