டாக்டர் கிருஷ்ணசாமியை வழிமறித்து கைது செய்த போலீஸார்: மதுரையில் நடந்தது என்ன?

டாக்டர் கிருஷ்ணசாமியை வழிமறித்து கைது செய்த போலீஸார்: மதுரையில் நடந்தது என்ன?

விருதுநகருக்கு ஆதரவாளர்களுடன் காரில் சென்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் மின்கட்டண உயர்வைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னை, கோவையில் ஏற்கெனவே போராட்டம் நடைபெற்றது. தென்மாவட்டங்களில் இன்று முதல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விருதுநகரில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி காரில் சென்றார். அவர் காருடன் அவருடைய ஆதரவாளர்கள் நான்கு கார்களில் சென்றனர்.

இந்த நிலையில் மதுரையை அடுத்த வலையங்குளம் சுங்கச்சாவடியில் மருத்துவர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்ற நான்கு கார்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, சாலை விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பயணம் மேற்கொண்டதால் அனைவரையும் கைது செய்வதாக போலீஸார், மருத்துவர் கிருஷ்ணசாமியிடம் தெரிவித்தனர். இதனைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதன் பின் மருத்துவர் கிருஷ்ணசாமியையும் அவருடைய ஆதரவாளர்களையும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அபபகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in