அண்ணாமலையின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி!

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

பெரியாரின் சிலையை அகற்றுவோம் என்ற அண்ணாமலையின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

என் மண் என் மக்கள் யாத்திரை நடத்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஸ்ரீரங்கத்தில் நேற்று பேசியபோது,  "பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் மற்ற இடங்களில் உள்ள பெரியார் சிலைகளை அகற்றுவோம் என்றும்,  அறநிலையத்துறை என்ற ஒன்று பாஜக ஆட்சிக்கு வந்த நாளில் இருக்காது என்றும் பேசியிருந்தார்.  இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்வினைகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் இன்று திருச்சி வந்திருந்த புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தையும் அகற்றுவோம் என்று சொன்னால் அது சரியாக இருக்கும். மாறாக, தனிப்பட்ட முறையில் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்பது எதிர் விளைவுகளை உருவாக்கும்.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

கோயில் சொத்துக்களை முறையாக பராமரிப்பதில் இந்து சமய அறநிலையத் துறையிலுள்ள குறைபாடுகளைக் களைய வேண்டுமே தவிர அந்தத் துறையை களைப்பதோ அல்லது தனியாரிடம் தருவதோ கூடாது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப ஜனவரிக்குப்பின் அரசியல் சூழல் மாறும். அதற்கேற்ப புதிய தமிழகம் கட்சியின் அரசியல் முடிவு இருக்கும்.

தென் தமிழகத்தில் சாதிய மோதலைத் தூண்டும் வகையிலான சம்பவங்கள் சமீபகாலமாக நடைபெறுகிறது. இது திட்டமிட்டு தூண்டப்படுகிறதா என்பதை மத்திய, மாநில அரசுகள் தான் கண்டறிய வேண்டும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!

அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!

80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!

தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!

பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in