தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை: பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலைதமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை: பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்

தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோபமாக கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ முதலமைச்சர் ஸ்டாலினை நன்றாக தூங்க விடுங்கள். அவர் சரியாக தூங்காததால் பிதற்றல்களாகப் பேசுகிறார். நன்றாக தூங்கினால் தெளிவாக பேச முடியும். ஒய்வு இல்லாமல் உள்ளார். தமிழக அரசியலில் சாதிகளைக் கலந்து பிரிவினையைக் கொண்டு வந்த பெருமையும் திமுகவிற்கு தான் உண்டு.  

அடுப்புக் கரியைப் பார்த்தால் அண்ட கரிக்கு பொறாமை வந்து விடும். தேஜஸ்வி யாதவ் முதலமைச்சரின் பேரன் வயது. அவர் தந்தையின் தயவுடன் பீகாரின் துணை முதல்வராக உள்ளார். பேரன் வயதில் உள்ள துணை முதல்வரின் சான்று வாங்குவது முதலமைச்சர் பெருமைப்படுவது அவரது அரசியல் தாழ்ந்து போய் உள்ளது என்பதையே காட்டுகிறது.

தேசிய அரசியல் என்றால் கே.சி.ஆர், மம்தா, நிதிஷ்குமார், அர்விந்த் கேஜ்ரிவால் வந்து இருக்க வேண்டும். சினிமாவில் ஹீரோ பின்னால் 2-ம் தர ஹீரோக்கள் பேசுவது போல் இருந்தது. இதை பார்த்து பாஜக பயப்படப் போகிறதா? மோடி ஆட்சியில் யாரும் யாரைப்பார்த்தும் பயப்படத் தேவையில்லை.

கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அடுத்த தலைவர்கள் உருவார்கள். திராவிட கட்சிகளைச் சார்ந்து தான் பாஜக வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. இது பாஜகவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லட்டும். கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் கட்சியில் இருப்பார்கள். 

பாஜகவில் இருந்த நிர்வாகிகளைச் சேர்த்துதான் பெரிய கட்சி என காட்ட வேண்டுமா? அந்த நிலைமைக்கு உங்கள் கட்சி வந்து விட்டதா என மக்கள் நினைக்கின்றனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். 

தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் நான்கு பேர் கோபித்து கொண்டு வெளியே செல்லத்தான் செய்வார்கள்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in