கவலைப்பட வேண்டாம், பாஜக அழிக்கப்படும்: அமித் ஷாவிற்கு லாலு பிரசாத் யாதவ் பதிலடி

கவலைப்பட வேண்டாம், பாஜக அழிக்கப்படும்: அமித் ஷாவிற்கு லாலு  பிரசாத் யாதவ் பதிலடி

2024-ல் பாஜக அழிக்கப்படும் என்று பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக பிஹார் மாநிலம் சென்றுள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெற மக்களைத் தேர்தலுக்காக இந்த பயணத்தை அமித் ஷா மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கடந்த மாதம் பிஹார் மாநிலத்தில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றத்தால் பாஜக ஆட்சியை இழந்த பிறகு அமித்ஷாவின் முதல் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஹார் மாநிலம் பூர்னியாவில் உள்ள ரங்கபூமி மைதானத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ​நேற்று பேசுகையில், ​ "தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் முதுகில் குத்திய நிதிஷ் குமார், இன்று ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் மடியில் அமர்ந்திருக்கிறார்" என்று குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில், டெல்லி விமானம் நிலையத்தில் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "கவலைப்பட வேண்டாம், பாஜக அழிக்கப்படும்" என்று ஒரே வார்த்தையில் கூறினார். முன்னதாக அமித் ஷாவின் கருத்துக்கு பதிலளித்த லாலு , "அமித் ஷா கலக்கமடைந்துள்ளார். அவரது அரசு பிஹாரில் அழிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டிலும் இதேதான் நடக்கும். அதனால் தான், அமித் ஷா அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இதை காட்டு ராஜ்ஜியம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் குஜராத்தில் அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார்? அவர் குஜராத்தில் இருந்தபோது காட்டுராஜ்ஜியம் தான் இருந்தது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in