'காங்கிரஸ் வீணான சக்தியாக மாறிவிட்டது...அதற்காக வாக்குகளை விரயம் செய்யாதீர்' - ஒவைசி காட்டம்

அசதுதீன் ஒவைஸி
அசதுதீன் ஒவைஸி

காங்கிரஸ் கட்சி நாட்டில் வீணான சக்தியாக மாறிவிட்டது. எனவே அந்த கட்சிக்கு வாக்களித்து மக்கள் தங்கள் வாக்குகளை வீணாக்கக் கூடாது என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி முதன்முதலாக சில இடங்களில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவைசி "காங்கிரஸ் நாட்டில் வீணான சக்தியாக மாறிவிட்டது. அது அதன் இருப்பை இழந்துவிட்டது, அதற்காக உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். அதுபோல இந்திய எல்லைக்குள் ரகசியமாக நடக்கும் சீன ஊடுருவலை தடுக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தவறிவிட்டது. எனவே எல்லையில் கவனம் செலுத்தி சீன ஆக்கிரமிப்பை பிரதமர் நரேந்திர மோடி தடுக்க வேண்டும்" என தெரிவித்தார்

மேலும், "அகில இந்திய கல்வி ஆய்வறிக்கையின்படி அனைத்து துறைகளிலும் முஸ்லீம்கள் பின்தங்கியுள்ளனர். இதற்கு யார் காரணம் என்று காங்கிரஸையும், பாஜகவையும் நான் கேட்க விரும்புகிறேன், முஸ்லீம்கள் அனைவரும் அரசியல் சக்தியாக வரவில்லை என்றால் இது எதுவும் மாறாது" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in