கருத்துக்கணிப்புகளை நம்பவேண்டாம்...நாங்கள் இத்தனை இடங்களில் வெல்வோம்: அடித்து சொல்லும் காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்!

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்கருத்துக்கணிப்புகளை நம்பவேண்டாம்...நாங்கள் இத்தனை இடங்களில் வெல்வோம்: அடித்து சொல்லும் காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்!

காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 141 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், மாநிலத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக அலை வீசுகிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இன்று பேசிய சிவக்குமார்,"கருத்துக்கணிப்பு முடிவுகளை நான் நம்பவில்லை. 141 இடங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் மாதிரி அளவு மிகவும் பெரியது. எக்ஸிட் போல் மாதிரி அளவு சிறியது. காங்கிரஸுக்கு ஆதரவாக பெரும் அலை உள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகளில் 20 இடங்கள் மாறுபடும். நான் கொடுத்த எண்ணிக்கை அதிகரிக்கும், குறையாது.

எங்களுக்குச் சாதகமான முடிவுகளைக் காட்டும் எக்சிட் போல்களை நான் மறுக்கவில்லை. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், ஆனால் நாங்கள் தெளிவான பெரும்பான்மையைப் பெறுவோம். இது எனது உறுதியான நம்பிக்கை" என்று அவர் கூறினார்

141 இடங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கையின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கிய டி.கே. சிவக்குமார், தான் களத்தில் இருந்ததாகவும், தனது வேலையை சிறப்பாகச் செய்ததாகவும் கூறினார். கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய டி.கே.சிவக்குமார், தேர்தலில் பாஜகவும், பெரிய தலைவர்களும் பணம் செலவழித்து பிரச்சாரம் செய்தாலும் தீர்ப்பு காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் என்றார்

கூட்டணி ஆட்சிக்கு தயாராக இருப்பதாக ஜேடிஎஸ் தலைவர் எச் டி குமாரசாமி கூறியது குறித்த கேள்விக்கு, குமாரசாமி என்ன சொன்னார் என்று தெரியவில்லை என்று டிகே சிவக்குமார் கூறினார். ஜேடிஎஸ் தொண்டர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக காங்கிரஸில் சேருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். நான் ஓய்வு பெறுவது இல்லை. நான் உயிருடன் ஆரோக்கியமாக இருக்கும் வரை தொடர்ந்து போராடுவேன், மக்களுடன் இருப்பேன் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in