வட மாநில தொழிலாளர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: சீராக் பஸ்வான் வேண்டுகோள்

சிராக் பஸ்வான்
சிராக் பஸ்வான்வட மாநில தொழிலாளர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - சீராக் பஸ்வான் வேண்டுகோள்

’’வதந்திகளை வடமாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம். இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. பீகார் - தமிழ்நாடு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்க சிலர் முயற்சி செய்கின்றனர்’’ என லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சீராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் வெளியேறி வரும் நிலையில், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவர் சீராக் பாஸ்வான் எம்.பி. பல்லாவரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பீகார் தொழிலாளர்களை சந்தித்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, ‘’பீகாரை சார்ந்த அதிகப்படியான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அச்சுறுத்தல் இருப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.  தமிழக அரசின் சார்பாக அந்த வீடியோக்கள் வதந்திகள் என அறிக்கைவிட்ட நிலையில், பொய்யான வீடியோக்களை பரப்பியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இந்த நாடு அனைவருக்கும் பொதுவானது. எனக்கு தமிழகம் புதுமையானது அல்ல. எனது தந்தையும் தமிழகம் வந்து இருக்கிறார். என் மாநிலத்தைச் சார்ந்த மக்கள் கூறுவதை முழுமையாக நான் நம்புகிறேன். அவர்கள் தொடர்ந்து எனக்கு தொலைபேசியில் அழைத்துப் தமிழ்நாட்டில் அச்சுறுத்தப்படுவதாகவே கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களை நான் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். தமிழகத்திலிருந்து தாக்கப்பட்டது உண்மை என எனக்கு தொடர்ந்து அழைப்பு வந்ததால்  இன்று நான் தமிழகம் வருகை தந்துள்ளேன். ஆனாலும் இந்த விவகாரத்தை நான் அரசியாலக்க விரும்பவில்லை. யாரும் அரசியல் செய்யவும் வேண்டாம்.

இது தொடர்பாக நான் தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவியும் சந்திக்க உள்ளேன். மேலும் தன்னை தொடர்பு கொண்டு தமிழகத்தில் தங்களை தாக்குவதாக கூறிய பீகார் மாநிலத்தை சேர்ந்தவரின் பெயர் மற்றும் போன் நம்பரையும் வெளியிட்டார்

பீகாரில் தவறான நிர்வாகத்தின் காரணமாக தொழிலாளர்கள் மற்ற மாநிலத்திற்கு சென்று வருகின்றனர். பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாரின் தவறான அணுகுமுறையால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னலுக்குள்ளாகின்றனர்’’ என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in