`நெருப்போடு விளையாட வேண்டாம்’- அண்ணாமலை, சீமானை எச்சரிக்கும் ஜெயக்குமார்!

 ஜெயக்குமார்
ஜெயக்குமார்`நெருப்போடு விளையாட வேண்டாம்’- அண்ணாமலை, சீமானை எச்சரிக்கும் ஜெயக்குமார்!

’’அதிமுக தெளிந்த நீரோடைப் போலவும், திறந்த புத்தகமாக உள்ளது. எங்களுடைய சொத்துக்களை அண்ணாமலை, சீமான் போன்றவர்கள் வெளியிடுவதால் எந்த அச்சமும் இல்லை. அதே நேரத்தில் நெருப்போடு விளையாட வேண்டும்’’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268-வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும், மலர்த் தூவியும் மரியாதைச் செலுத்தினார். இதில் திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’திமுக ஒரு ஊழல் கட்சி என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். திமுகவின் குடும்ப ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்கவே அதிமுகவை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கினார். திமுகவினரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தாலே தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லலாம்.

தமிழகத்துக்கு 2.5 கோடி ரூபாயைக் கடனாக ஏற்படுத்திவிட்டு, அரசுக்கு வர வேண்டிய வருவாய் திமுகவினர் ஒவ்வொருவரும் சொத்து சேர்த்து வைத்துள்ளனர். நாங்கள் தெளிந்த நீரோடையாகவும், திறந்தப் புத்தகமாக உள்ளோம். எங்களின் சொத்துப் பட்டியல் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அவற்றை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம்.

தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம். அது நெருப்போடு விளையாடுவது போன்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. கூட்டணிக் குறித்து அண்ணாமலை முடிவு செய்ய முடியாது. மத்திய குழுத் தான் முடிவுச் செய்யும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in