
குடிகாரர்களுக்கு உங்களது மகள்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்றும் குடிபோதையால் என்னுடைய மகனை இழந்துவிட்டேன் என்றும் மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
உத்தரபிரதேசம் மாநிலம், லம்புவால் நடந்த போதை பழக்கம் மீட்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், நண்பர்களால் மது பழக்கத்திற்கு அடிமையான எனது மகன் ஆகாஷ் இறந்து விட்டார் என்றும் ஒரு குடிகாரரின் ஆயுள் மிகவும் குறைவு என்றும் தான் ஒரு எம்பி ஆகவும் என்னுடைய மனைவி எம்எல்ஏ ஆகவும் இருந்தும் என் மகனை காப்பாற்ற முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
என்னுடைய மகனை காப்பாற்ற தவறியதால் என்னுடைய மருமகள் விதவை ஆகிவிட்டால் என்று வேதனை தெரிவித்த மத்திய அமைச்சர், உங்கள் மகள், சகோதரிகளுக்கு இந்த நிலைமை வராமல் இருப்பதற்கு போதைப் பிரியர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியைவிட அந்தப் பழக்கம் இல்லாத கூலித் தொழிலாளி நல்ல மாப்பிள்ளை தான் என்றும் உருக்கமாக கூறினார்.
மத்திய அமைச்சரின் இந்த உருக்கமான பேச்சு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கண்கலங்க வைத்துவிட்டது.