`இமேஜை டேமேஜ் பண்ணுகிற அளவுக்கு ஈடுபட வேண்டாம்'- சொல்கிறார் ஜெயக்குமார்

`இமேஜை டேமேஜ் பண்ணுகிற அளவுக்கு ஈடுபட வேண்டாம்'- சொல்கிறார் ஜெயக்குமார்

"பொய்யான செய்தியை எழுதி குழப்பத்தை ஏற்படுத்தி ஒரு பெரிய கட்சியின் இமேஜை டேமேஜ் பண்ணுகிற அளவுக்கு பத்திரிகைகள் ஈடுபட வேண்டாம்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரபலமான பத்திரிகை ஒன்றில் தவறானசெய்தி ஒன்று வந்துள்ளது. ஓபிஎஸ் என்பவர் புகழ் பெற்ற மாபெரும் கட்சியா நடத்துகிறார். இரண்டாம் கட்ட தலைவருடன் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்கிறார்கள். எப்போது நடந்தது என்று சொல்ல முடியுமா? கேஷியமான தகவல்கள் என்று சொல்லி ஒரு கட்சியை கலங்கப்படுத்தும் வேளையில் பத்திரிகைகள் இறங்க வேண்டாம். இதற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 25 சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

இப்போது சொல்கிறேன் கேளுங்கள். அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக கூட்டணி அமையும். 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிதான் அமையும். எங்கள் தலைமை ஏற்று தான் அனைவரும் வருவார்கள். அப்படி வரும்போது நாங்கள் கொடுக்கிற சீட்டு தான். யாரும் எங்களிடம் டிமாண்ட் செய்ய முடியாது. இதை எழுதிக் கொள்ளுங்கள். இதைவிட உறுதியாக சொல்ல முடியுமா? அப்போ, அந்த பத்திரிகை செய்தி பொய்யென்று இப்போது அடிபட்டு விடுகிறது அல்லவா. பொய்யான செய்தியை எழுதி குழப்பத்தை ஏற்படுத்தி ஒரு பெரிய கட்சிக்கு இமேஜ் டேமேஜ் பண்ணுகிற அளவுக்கு பத்திரிகைகள் ஈடுபட வேண்டாம். ஓபிஎஸ் பத்தி வானளாவிய அளவுக்கு எழுதிக் கொள்ளுங்கள். நான்கு பக்கம் கூட எழுதிக் கொள்ளுங்கள். எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் எங்கள் கட்சியை டேமேஜ் பண்ணுகிற அளவுக்கு பத்திரிகைகள் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நடக்காத விஷயத்தை பக்கத்திலிருந்து பார்த்து இருக்கிற மாதிரி எழுதினால் குழப்பத்தை ஏற்படுத்துகிற முயற்சி இது. 1991-ல் ஓபிஎஸ் யார் என்று தெரியாது, 1989-ல் ஓபிஎஸ் யார் என்று தெரியாது, 1996-ல் ஓபிஎஸ் யார் என்று தெரியாது, 2001-ல் தான் சீனுக்கு வருகிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பார்த்து அவர் கட்சிக்கு வரவில்லை. தேனி நகரத்தில் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்து பயணித்தவர் தான் ஓபிஎஸ். அதிமுகவில் நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சியின் கொடியை பயன்படுத்துவது தவறு" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in