இந்தி தேசிய மொழியா? - அஜய் தேவ்கனுக்கு தலைவர்கள் சூடான பதிலடி

இந்தி தேசிய மொழியா? - அஜய் தேவ்கனுக்கு தலைவர்கள் சூடான பதிலடி

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு கர்நாடக முதல்வர் முதல், அரசியல் கட்சித் தலைவர்கள் சூடான பதிலடி கொடுத்துள்ளனர்.

அண்மையில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ``இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி'' என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த கன்னட நடிகர் சுதீப், "இந்தி நமது தேசிய மொழி அல்ல” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன், "உங்களைப் பொறுத்தவரை இந்தி தேசிய மொழி அல்ல; பிறகு ஏன் உங்கள் தாய்மொழியில் எடுக்கும் படங்களை இந்தியில் வெளியிடுகிறீர்கள்? இந்தி இதற்கு முன்பும், எப்போதும் நமது தாய்மொழி; தேசிய மொழி. ஜன கண மன" என கூறியிருந்தார். இப்படி இரண்டு நடிகர்களுக்கும் இடையே மொழி தொடர்பான வார்த்தை போர் நடந்து வந்த நிலையில், அஜய் தேவ்கனுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் சுடச்சுட பதில் அளித்துள்ளனர்.

கர்நாடக முதல்வர் பவசராஜ் பொம்மை், "மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் நாட்டில் பிராந்திய மொழிகளே மிக முக்கியமானவை என்றும் நடிகர் சுதீப்பின் கருத்தை அனைவரும் மதிக்க வேண்டும்" என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா, "இந்தி எப்போதும் தேசிய மொழியாக இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை" என்று விமர்சித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, அதிகம்பேர் பேசுவதால் இந்திய தேசிய மொழி ஆகாது எனவும் ஒரே தேசம் ஒரே மாெழி என்ற அடிப்படையில் பாஜகவின் ஊதுகுழலாக அஜய் தேவ்கான் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in